மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது;
கடந்த 15.7.2025 அன்று சென்னை பெரம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க., துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி., அவர்கள் இன்று வரையில் ஒட்டுமொத்த தமிழக மக்களால் தூய நல்லாட்சிக்கு உதாரணமாகவும் எளிமையான அரசியல் தலைமையின் அடையாளமாகவும் போற்றப்படும் ஒப்பற்ற தலைவரான காமராஜர் பற்றி உண்மைக்கு புறம்பாகவும் சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாகவும் பேசியுள்ளார்.
இது தமிழகத்தில் தங்களின் மானசீக தலைவராக காமராஜர் அவர்களை கொண்டாடும் லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் தேசிய சிந்தனை கொண்டவர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. பெருந்தலைவர் காமராஜரை தங்களின் குலதெய்வமாக போற்றும் ஒரு சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய திருச்சி சிவா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி மத்திய மாவட்ட தலைவர் புகழ் இளைஞர் அணி தலைவர் நவீன் நகர தலைவர் ரமேஷ் மாவட்ட பொது செயலாளர் பாபு மேற்கு மாவட்ட தலைவர் சுமன் இளைஞரணி தலைவர் சத்ய சிவன் மாநில செயலாளர் மாதையன் மாநில செயலாளர் சங்கர் கணேஷ் கொள்கை பரப்பு செயலாளர் மாதையன் நிர்வாகிகள் சத்தியசீலன் நவீன் குமார் ராமன் இனியவன் சரவணன் பெரியசாமி வெங்கடேஷ் சேகர் உள்ளிட்டோர் மனு அளித்தனர்
