திருவொற்றியூரில் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் இருந்து 56 மூத்த குடிமக்களுக்கு ஆன்மீகப் பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு.
திருவெற்றியூர்.
ஆடி மாத ஆன்மீகப் பயணத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர் பாபு சுவாமி தரிசனம் செய்து பின்னர் கோவில் வளாகத்தில் குத்துவிளக்கு ஏற்றியும் பேருந்து ஆன்மீக பயணத்தை கொடியாசைத்து துவக்கி வைத்தார். ஆடி மாதத்தை முன்னிட்டுஎன்று மட்டும் மூத்த குடிமக்களான தமிழகம் முழுவதும் சுமார் 350 க்கும் மேற்பட்டோர் பேருந்துகளில் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கும் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்கள், அறுபடை வீடு முருகன் கோயில்கள், அடி மாத அம்மன் கோயில்கள், புரட்டாசி மாத வைணவக் கோயில்களுக்கு இலவசமாக ஆன்மிக பயணம் சிறப்பு பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்படுகின்றனர்.
அந்தவகையில், இந்த ஆண்டு ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையில் அம்மன் கோயில்களுக்கான ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி பாரிமுனை காளிகாம்பாள் மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் மாங்காடு காமாட்சி அம்மன் உள்ளிட்ட ஐந்து கோவில்கள் நேற்று ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர். மண்டல குழு தலைவர் தி. மு தனியரசு. மற்றும் திருக்கோயில் உதவி ஆணையர் நற்சோனை.தமிழ்ச்செல்வன். குமரேசன். உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
