நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரம் ஊராட்சி மன்ற பகுதியில் அமைந்துள்ள பொதிகை அமர்நாத் கல்வி அறக்கட்டளை காமராஜர் மஹாலில் வைத்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது

முகாமில் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, ஆதார் திருத்தம், பிறப்பு இறப்பு சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் போன்ற பதிவுகளை மையமாகக் கொண்டு இந்த முகாம் நடைபெற்று வருகிறது .

இந்த முகாமில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் கலந்து கொண்டு நேரில் ஆய்வு செய்தார். இந்த முகாமில் பொதுமக்கள் ஏராளமான ஊர் கலந்து கொண்டு பயனடைந்தனர்

இந்நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வைகுண்டம், அம்பை ஒன்றிய குழு தலைவர் பரணிசேகர், சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்