ஈரோடு,
பல தலைமுறைகளாக இந்திய மக்களின் வலுவான நம்பிக்கையை பெற்ற கீர்த்திலால்ஸ் குழுமத்தின் நவீன, சமகால வைர மற்றும் தங்க ஆபரண பிராண்டான க்ளோ பை கீர்த்திலால்ஸ், ஈரோடு மாநகரின் ஆர்கேவி சாலையில் அதன் புதிய பிரத்யேக ஷோரூம் கோலாகலமாக திறக்கப்படும் நிகழ்வை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த தொடக்கமானது, இந்தியா முழுவதிலும் இந்த பிராண்டு மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான விரிவாக்க திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னேற்ற நடவடிக்கையை குறிக்கிறது.
ஈரோடு மாநகரின் மிக முக்கியமான பகுதிகளுள் ஒன்றான ஆர்கேவி சாலையில் அமைந்திருக்கும் இந்த புதிய ஷோரூம், தங்களது ஆளுமையை பிரதிபலிக்கும் வகையில் ஆபரணங்களை தேடி ஆராய்ந்து வாங்கும் நகர்ப்புற வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அழகான, மெல்லிய எடையிலான இயற்கையான வைர மற்றும் தங்க ஆபரணங்களின் முத்திரை பதித்த கலெக்ஷனை இந்த புதிய ஷோரூம் வழங்கும். இன்றைய நவீன யுக மகளிரின் அழகியல் பண்புகள் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த நவீன ஷோரூமில் தினசரி அணியக்கூடிய பண்பினை காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கும் நவீனத்துவத்துடன் நேர்த்தியாக கலந்து உருவாக்கப்பட்ட கலைநயமிக்க ஆபரணங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
“எமது பிராண்டின் பண்பியல்புகளை மிக இயல்பாக பிரதிபலிக்கும் ஒரு உயிரோட்டமிக்க, நவீன வடிவமைப்புகளை விரும்பி தேர்வு செய்கின்ற நகரமான ஈரோட்டில் க்ளோ பை கீர்த்திலால்ஸ்-ன் அழகான ஆபரண கலெக்ஷனை வழங்குவதற்கான ஷோரூம்-ஐ திறப்பதில் நாங்கள் பெரும் உற்சாகம் கொள்கிறோம்” என்று கீர்த்திலால்ஸ் குழுமத்தின் பிசினஸ் உத்திக்கான இயக்குநர் திரு. சூரஜ் சாந்தகுமார் கூறினார். அவர் மேலும் பேசுகையில், “எமது ஷோரூம் திறப்பு விழா நிகழ்விற்கு கிடைத்திருக்கும் உற்சாகமான வரவேற்பு, இச்சந்தை மீதான எமது நம்பிக்கையை வலுவாக உறுதி செய்கிறது. தங்களது லைஃப் ஸ்டைல் உடன் இணக்கமான ஜொலிக்கும் ஆபரணங்களை பெண்கள் ஆராய்ந்து தேர்வு செய்வதற்கான ஒரு நேர்த்தியான அமைவிடத்தை இந்நகரில் நிறுவியிருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். புதிய வாடிக்கையாளர்களுடன் பிணைப்பையும், நல்லுறவையும் உருவாக்கம் அதே நேரத்தின் வளர்ச்சி மற்றும் புதுமையான செயல்பாடுகள் மீதான எமது முக்கியமான பொறுப்புறுதியை வெளிப்படுத்துவதாக இந்த விரிவாக்க நடவடிக்கை அமைகிறது” என்று குறிப்பிட்டார்.
மிக பிரமாண்டமாக நடைபெற்ற ஷோரூம் திறப்பு விழாவில் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட ஆபரண கலைப்படைப்புகளின் கலெக்ஷன்களை நேரில் பார்வையிட்டு வாங்குவதற்கான ஆர்வத்தோடு இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த கீர்த்திலால்ஸ்-ன் விசுவாசமிக்க வாடிக்கையாளர்களும், ஆபரண ஆர்வலர்களும் அதிக எண்ணிக்கையில் வருகை தந்தனர். பாரம்பரிய வடிவமைப்புகளிலிருந்து சம காலத்திய பன்முகத்திறன் கொண்ட ஸ்டைல்கள் வரை இங்கு இடம் பெறும் ஒவ்வொரு ஆபரணமும் தனித்துவ பண்பையும் மற்றும் தனிப்பட்ட ஆளுமையை கொண்டாடும் விதத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பெங்களூர், சென்னை, கொச்சி, திருச்சூர், திருப்பூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் க்ளோ பை கீர்த்திலால்ஸ்-ன் ஷோரூம்கள் ஏற்கனவே சிறப்பாக இயங்கி வரும் நிலையில், இந்தியாவில் இந்த பிராண்டால் தொடங்கப்படும் ஏழாவது ஷோரூம்-ஆக இந்த வலையமைப்பில் இணைந்திருக்கிறது.
