கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் தலைமை பண்பு வளர்ப்பதற்காக மகிழ்முற்றம் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்‌ மகிழ்முற்ற ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா ஒருங்கிணைத்து பேசும் பொழுது

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் மகிழ் முற்றம்’ என்ற திட்டத்தின் கீழ் மாணவர் குழுக்கள் உருவாக்கப்பட்டது.மகிழ் முற்றம் திட்டம் என்பது தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், மாணவர் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவர்கள் மூலம் மாதிரி சட்டமன்றம், மாதிரி நாடாளுமன்றம் போன்ற செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன.

மாணவர்களிடையே தலைமைப் பண்பு, கூட்டுறவு, மற்றும் பங்கேற்பு மனப்பான்மையை வளர்ப்பது. பள்ளி அளவிலான வினாடி வினா போட்டிகள் நடத்துதல், மற்றும் பிற கல்விசார் மற்றும் கல்விசாரா செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல் மாணவர்களின் தலைமைப் பண்பு, பேச்சு திறன், மற்றும் குழுவாக செயல்படும் திறன் மேம்படும்.

கற்றல் திறன் மேம்பாடு வாசிப்பு இயக்க செயல்பாடுகள் வினாடி வினா மற்றும் தேர்வுகள் உள்ளிட்ட செயல்பாடுகளில் மாணவர்கள் திறனை அளவீடு செய்வதன் மூலம் அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல்.குழு மனப்பான்மை மாணவர்களிடையே உள்ள வேற்றுமைகளை கலைந்து தங்கள் குழுவின் வெற்றிகரமான செயல்பாட்டும் மனப்பான்மையை ஊக்குவித்தல். அனைவருக்குமான வாய்ப்பு அனைத்து மாணவர்களின் திறமையை வெளிக்கொணர வாய்ப்புகளை உருவாக்குதல். நேர்மை நடத்தைகளை வலுவூட்டுதல் குழு அமைப்பின் மூலம் மாணவர்களிடையே நேர்மை நடத்துகளை வலுவூட்டி அவர்தம் வாழ்வில் நீண்ட காலம் நிலைப்பெறச் செய்தல்.

ஆசிரியர் மாணவர் உறவை மேம்படுத்துதல் ஆசிரியர் குழுக்களின் வழிகாட்டுநர்களாக செயல்படுவதால் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்குகின்றனர்.

இதன் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் உறவை மேம்படுத்துதல். இந்த இலக்குகளை அடைவதன் மூலம் குழு அமைப்பானது முழுமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்விச் சூழல் உருவாகுவதை உறுதி செய்கிறது. இது மாணவர்களை கற்றல் திறன் மட்டும் அல்லாது சமூகத்தில் பொறுப்பான உறுப்பினராக வளர தேவையான மதிப்புகள், திறன்கள் மற்றும் ஊக்கம் ஆகியவற்றை வளர்க்கிறது.

இந்த திட்டத்தின் மூலம், மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிக்க முடியும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற தலைப்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன

என்று பேசினார். குறிஞ்சி குழுவின் பொறுப்பாசிரியராக கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை, முல்லை குழுவின் பொறுப்பாசிரியராக ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சிந்தியா, மருதம் குழுவின் பொறுப்பாசிரியராக நிவின், நெய்தல் குழுவின் பொறுப்பாசிரியராக வெள்ளைச்சாமி, பாலை குழுவின் பொறுப்பாசிரியராக ஜெம்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் மாணவர் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள.நிறைவாக மகிழ்முற்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது. இது நிகழ்வில் ஆசிரியை செல்விஜாய், கணிப்பொறி உதவியாளர் தையல்நாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.