பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அரியலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இக்கூட்டத்தில்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அரியலூர் மாவட்டத் தலைவராக கே.சபியுல்லா,மாவட்ட செயலாள ராக ப முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளராக சையத் ரஷித் ,மாவட்டத் துணைத் தலைவராக ப .சம்சுதீன், மாவட்ட துணை செயலாளராக
எஸ் காதர் பாஷா உள்ளிட்ட புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்ப ட்டனர்.
கூட்டத்தில் இஸ்லாமியர் களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 7% (3.5 % தற்போது உள்ளது) சதவீத இட ஒதுக்கீடு உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். கடந்த காலங்களில் சிறுபான்மையின ருக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் ரத்து செய்ப்பட்டுள்ளது ,
அது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமது சமூக விரோதிகள் தாக்குதலுக்கு பின் மாயமானார் .அது குறித்து விசாரணை சிபிஐ செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. இவ் வழக்கில் சிபிஐ ஒரு தலைப்பட்சமாக, அதாவது சிபிஐ பாஜக அரசின் கைப்பாவை யாகசெயல்பட்டுஉள்ளது,பாதிக்கப்பட்டவருக்கு உரிய நீதி கிடைக்க வில்லை அதனை வன்மையாக கண்டிக்கிறோம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
