விருத்தாசலம் : ஜூலை 05.
விருதாச்சலம் தெற்கு ஒன்றியம் சார்பில் பாஜகவில் 300 க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வெற்றிகரமான ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்தும் தமிழக அரசின் மேலுள்ள அதிருப்தியின் காரணமாகவும் பல்வேறு மாற்று கட்சியை சேர்ந்தவர்கள்,தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகின்றனர்,அதன் ஒரு பகுதியாக கடலூர் கிழக்கு மாவட்டம் மற்றும் விருதாச்சலம் தெற்கு ஒன்றியம் சார்பில் இன்று மாற்றுக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையும் மாபெரும் இணைப்பு விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது,
இதில் தெற்கு ஒன்றிய தலைவர் சங்கர் தலைமையில் 300 க்கு மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்,
மேலும் இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பாஜகவில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார்.மேலும் நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் தங்க வெங்கடேசன் ஒன்றிய பொதுச் செயலாளர்கள் தமிழ்வாணன், மணிகண்டன், அறிவழகன் முத்துவேல்,ஒன்றிய துணைத் தலைவர் பாக்கியராஜ் ஒன்றிய பொருளாளர் செல்வ முருகன் ஒன்றிய அலுவலக செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
மற்றும்தமிழ்மணி நன்றி உரையாற்றினார் மேலும் மாநில மாவட்ட நகர மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
