துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில்
நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே என் நேரு “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்ததை தொடர்ந்து துறையூர் சட்டமன்றத் தொகுதி ஜூலை 03 ஆம் தேதி மேற்கு ஒன்றியத்தில் உள்ள கண்ணனூரில் தமிழ்நாடு நிருவாகத் துறை அமைச்சர் கே என் நேருஓரணயில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து, துறையூர் சட்டமன்ற தொகுதியில் அதிகப்படியான உறுப்பினர்களை திமுகவில் இணைத்து மீண்டும் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் எம் எல் ஏ ஸ்டாலின் குமார், மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் ந.முரளி, ஒன்றிய செயலாளர்கள் வீரபத்திரன், அண்ணாதுரை, சிவ சரவணன், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் முத்து செல்வன், ந.அசோகன், துறையூர் நகர் மன்ற தலைவர் இ செல்வராணி,முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், துறையூர் நகர மாவட்ட பிரதிநிதி மதியழகன் துணை செயலாளர் இளங்கோவன், பிரபு, நகர்மன்ற உறுப்பினர் இளையராஜா,மாவட்ட பிரதிநிதி கண்ணனூர் குமார், லெனின் முன்னாள் தலைவர் மகேஸ்வரி ரவிசந்திரன்,
மாவட்ட ஐடி விங்க் சேகர், இளைஞர் அணி ஸ்டுடியோ சசிகுமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கு ஒன்றியத்தில் உள்ள கிராமப்புறங்களில் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி,18 வயது பூர்த்தியடைந்த இளைஞர், இளம்பெண்கள் உறுப்பினர் சேர்க்கையை படு வேகமாக செய்து வருகின்றனர். அமைச்சர் கே என் நேரு, பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கேஎன் அருண் நேரு மற்றும் மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், தொகுதி பொறுப்பாளர் தங்க கமல் ஆலோசனையின் படி மேற்கு ஒன்றியத்தில் அதிகப்படியான வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்த்து தமிழகத்தில் தொடர்ந்து முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைய முழு முயற்சியுடன் பாடுபடுவோம் என்று மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தெரிவித்தார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
