திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தயாளர் பிரபு
செல்:9715328420
மதுரை மண்டல திமுக பொறுப்பாளர் பிடி மணிமாறன் தன்னை ஏமாற்றி நஷ்டத்தை ஏற்படுத்தியதாக ஆடியோ வெளியீட்டு மக்காச்சோள வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான் போனதுக்கு அப்புறம் என் குடும்பத்தை துன்பப்படுத்தாதீர்கள் உருக்கமான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அடுத்த பெல்லம்பட்டி செங்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வானந்தம் (27), இவர் தனது மனைவி முத்து பிரியா மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக மக்காச்சோளம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இவர் சுங்கிலி பாளையம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் செல்பாஸ் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளதாக கிடைத்த தகவலின் பெயரில் சென்ற உறவினர்கள் அவரை மீட்டு கோவை ராயல் கேர் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது செல்போனை எடுத்துப் பார்த்த மனைவி முத்து பிரியா அதிலிருந்து ஆடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
செல்வானந்தம் தனது iphone-ல் இருந்து மற்றொரு போனுக்கு whatsapp மூலமாக இந்த ஆடியோ தகவல்களை அனுப்பி உள்ளார் அதில் மதுரை மண்டல திமுக பொறுப்பாளர் பிடி மணிமாறன் மற்றும் மதுரை தெற்கு மீனவர் அணி அமைப்பாளர் முத்துக்குமார் என இருவரும் சேர்ந்து மக்காச்சோளம் வியாபாரத்தில் தன்னை ஏமாற்றி கூடுதல் பணம் தர வேண்டும் என தனக்கு போலீசார் மூலம் அழுத்தம் கொடுத்து எழுதி வாங்கிக் கொண்டதாகவும்.
இதுவரை 15 லட்சம் கொடுத்துள்ள நிலையில் தொடர் மிரட்டல் விடுத்தும் அவ்வப்போது தன்னை அசிங்கப்படுத்தியும் வந்து பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் அதே போல ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும் அனுப்பாத மக்காச்சோளங்களுக்கு போலியாக பில் தயாரித்து 85 லட்சம் கொடுக்க வேண்டும் என தன்னை மிரட்டி 40 லட்சம் மற்றும் 45 லட்சம் என இரண்டு காசோலைகளை பெற்றுக் கொண்டு தனது மனைவி பெயரில் உள்ள ஓம் முருகா ஆயில் மில் மீது மோசடி வழக்கு பதிவு செய்தேன் என தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் தன்னை தொழிலில் பலர் ஏமாற்றி விட்டனர்
என்பதால் மன உளைச்சல் ஆகி நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனவும் நான் போனதுக்கு பிறகு என் குடும்பத்தை துன்பப்படுத்தாதீர்கள் என அந்த ஆடியோவில் பதிவிட்டுள்ளார் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த முத்து பிரியா ஆடியோ ஆதாரங்களுடன் குண்டடம் காவல் நிலையத்தில் தனது கணவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளார்.
