மூட்டு தேய்மானம்,தண்டு வட பிரச்னைகள் என எலும்பு தொடர்பான சிகிச்சைகளில் பெரும்பாலும் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் செய்யும் கோவை முத்தூஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் முத்து சரவணகுமாருக்கு குவியும் பாராட்டு

கோவை சிங்காநல்லுார் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் டாக்டர் முத்துாஸ் ஆர்த்தோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் முத்து சரவணக்குமார்..

எலும்பு முறிவு சிகிச்சையில் தமிழகத்தின் மிக முக்கிய மருத்துவமனையாக பார்க்கப்படும் முத்தூஸ் மருத்துவமனை தற்போது மூட்டு மற்றும் இடுப்பு தண்டுவடம் போன்ற எலும்பு தொடர்பான சிகிச்சைகளில் நவீன முறையில் ஊசிகள் வாயிலாக குணப்படுத்தும் எளிய நடைமுறையில் ஆயிரக்கணக்கான நோயாளிகளை குணப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார்..

இந்நிலையில் இவரது சேவையை பாராட்டி தேசிய மருத்துவர் தினத்தன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அரிமா சங்கம் உட்பட பல்வேறு தன்னார்வ அமைப்பினர் டாக்டர் முத்து சரவணகுமாருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்..

இது குறித்து, டாக்டர் முத்துாஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர் முத்து சரவணக்குமார் கூறுகையில்,

நோயாளிகளின் நலன் கருதி கோவையில் சரவணம்பட்டி,சூலூர்,மற்றும் மலுமிச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் முத்துாஸ் மருத்துவமனை செயல்பட்டு வருவதாகவும், எலும்பு முறிவு சிகிச்சையில், கொங்கு மண்டலத்தில் தலை சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக, டாக்டர் முத்துாஸ் மருத்துவமனை திகழ்வதாக தெரிவித்தார்..

எலும்பு மூட்டு சிகிச்சையில் இதுவரை பல்வேறு சாதனைகளை படைத்துள்ளதாக கூறிய அவர்,. இதுவரை, 9,000த்துக்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள்,மற்றும் இடுப்பு எலும்பு மாற்று சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்..

டாக்டர் முத்துாஸ் மருத்துவமனையில், மூட்டு அறுவை சிகிச்சை செய்து, 48 மணி நேரத்தில் வீட்டிற்கு செல்லலாம் என்ற அளவிற்கு நவீன முறையில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,கடந்த 15 ஆண்டுகளில், 5 லட்சத்திற்கும் மேலான சாலை விபத்தினால் ஏற்பட்ட எலும்பு முறிவுகளை சரிசெய்து சாதனை படைத்துள்ளது.

தலைக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் வந்த, ஆயிரத்திற்கும் மேலான நோயாளிகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் தீவிர சிகிச்சைகள் வாயிலாக காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..

குறிப்பாக முதுகு தண்டுவட சிகிச்சையில், அறுவை சிகிச்சை இல்லாமல், மருந்து ஊசிகள், பிசியோதெரபி மற்றும் தசை பயிற்சிகள் மூலம் சரி செய்வதில் கை தேர்ந்த மருத்துவமனையாகவும் முத்தூஸ் இருப்பதாக அவர்,பெருமிதம் தெரிவித்தார்…