கோவையில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர் நார்த் சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாமில் ரோட்டரி சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர்

ரோட்டரி சங்கங்களின் ஆண்டு துவக்க நாளாக ஜூலை 1 ஆம் தேதி ஆரம்பிக்கப்படுகிறது..

இந்நிலையில் பொதுவாக,பல்வேறு சமூக நலன் சார்ந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கோவை வடக்கு ரோட்டரி சங்கம் சார்பாக மருத்துவர் தினம் மற்றும் ரோட்டரி ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது..

முன்னதாக இரத்த தான முகாமை ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர் நார்த் தலைவர் சந்தோஷ் மற்றும் செயலாளர் சம்பத் குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்…

திட்ட தலைவர்கள் பிரதீப் மற்றும் ஆனந்த பிரபு ஆகியோர் ஒருங்கிணைத்த இதில் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள சாந்தி சோஷியல் சர்வீஸ் மருத்துவ மையம்,
இ.எஸ்.ஐ.மருத்துவமனை,மற்றும் சி.எம்.எஸ்.கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கோவை வடக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு குருதி கொடை அளித்தனர்..

இது குறித்து வடக்கு ரோட்டரி சங்க தலைவர் சந்தோஷ் கூறுகையில், ரோட்டரி தொடர்ந்து பல்வேறு சேவைகளை செய்து வருவதாகவும், ,இதன் தொடர்ச்சியாக இரத்ததான முகாமை நடத்தியதாக தெரிவித்த அவர்,இந்த முகாமில் சுமார் 150 யூனிட் இரத்தம் தானமாக வழங்கியுள்ளதாக தெரிவித்தார்..

இனி வரும் காலங்களில் தொடர்ந்து இது போன்ற சமூக நலப்பணிகளை வடக்கு ரோட்டரி சங்கம் செயல்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்..