சேத்தியாத்தோப்பு ஜூலை 3
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி எஸ். டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2025 – 26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவ தலைவர்களின் பதவி ஏற்பு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கே.பி. டி. இளஞ்செழியன் (முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர்) மற்றும் எஸ். டி .சேகர் (உரிமையாளர் குரு ராம் குழுமம்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சாமுவேல் சுஜின் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபா சுஜின் (குழந்தைகள் நல மருத்துவர்) ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
விழாவில் பள்ளியின் மாணவத் தலைவர் மற்றும் மாணவ குழு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களால் மாணவ பிரதிநிதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். மேலும் போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம் மாணவர்களால் நடித்துக் காண்பிக்கப்பட்டது.
