கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் அதிமுக மாணவரணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு திருபுவனம் பகுதியில் உள்ள ஆலயத்தில் தற்காலிக காவலாளியாக பணிபுரியும் அஜித்குமார் என்பவரை நகை திருட்டு வழக்கில் தனிப்படை காவலர்கள் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதால் உயிரிழந்த அஜித்குமார் என்பவருக்கு நீதி கேட்டு Justice for Ajith Kumar என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட புவனகிரி கிழக்கு ஒன்றிய மாணவரணி சார்பில் புவனகிரி நகரில் பரவலாக மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம் பேருந்து நிறுத்தம் டீக்கடை உள்ளிட்ட முக்கிய இடங்களில் புவனகிரி நகரம் முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது

இது சம்பந்தமாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் புவனகிரி பகுதியில் பரபரப்பு நிலவியது