கோவை நவிந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு துவக்க விழா கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கில் நடைபெற்றது.
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் டி.ஆர்.கே சரஸ்வதி மற்றும் நிர்வாக செயலர் டாக்டர் கே.பிரியா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,முதல் நிகழ்வாக கல்லூரியின் செயலாளர் ,நிர்வாக செயலாளர்,முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சேர்க்கை இயக்குனர் ஜெயலட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னுசாமி தலைமையுரை வழங்கினார். கல்லூரியின் செயலாளர் சிறப்புரையாற்றியதில் பெற்றோர்களுக்கு மாணவர்களின் மீதான அச்சம் வேண்டாம் என்றும்,சிற்பியாக இருந்து அவர்களை உருவாக்கி தருவதாக கூறினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர்,ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா மாணவர்களிடையே பேசுகையில்,மாணவர்களிடையே கல்வியினுடைய முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுடைய கவனம் முற்றிலுமாக படிப்பின் மீது இருத்தல் அவசியம் என்றும்,சமுதாயத்தில் போதைப் பழக்கமில்லா இளைஞர்களாக உருவாவதே பெருமையானது என்றும் பேசினார்.
மேலும் மாணவர்கள் கல்வி சார் பல திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.
விழாவின் இறுதியாக ஆங்கிலத்துறைத் தலைவர் பிரியா ஷரோன் தாமஸ் நன்றி கூறினார்.இவ்விழாவில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
