மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
தொடர்பாக சென்னை தலைமை அலுவலக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு, காவல்துறை தலைவர், A.கயல்விழி, இ.கா.ப வருகை புரிந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பதிவு
செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக 2 நாட்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளார்கள்.
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் கனம் காவல்துறை தலைவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான
குற்றத்தடுப்பு பிரிவு, அவர்களால் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும். மேலும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்துதல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பிரிவு 7(C) கீழ் (Protection Order) நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்கள். அதனை தொடர்ந்து கனம் காவல்துறை தலைவர் அவர்கள் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வருகை புரிந்து வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்கள். பின்னர் தென்காசி மாவட்டத்தில் தாக்கலான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள்
தொடர்பாக விவாதிக்கப்பட்டது
இக்கூட்டத்தில தென்காசி மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு,கூடுதல் காவல் கண்காணிப்பாளர், P.P.ஜீலியஸ் சீசர், பொறுப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .சங்கர், பெண்களுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு, துணை காவல் கண்காணிப்பாளர்.
அறிவழகன், பெண்களுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு,காவல் ஆய்வாளர் விஜி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, காவல் ஆய்வாளர் ராஜேஸ் மற்றும் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் காளீஸ்வரி, ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் .பாத்திமா பர்வின், புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்.மாரீஸ்வரி, சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கமலாதேவி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு, காவல் உதவி ஆய்வாளர் இரத்னபால் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்
