காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா. இன்று கல்லூரியின தீரன் சின்னமலை கலையரங்கத்தில் நடைபெற்றது.விழாவுக்கு கல்லூரி தாளாளர் எஸ். ஆனந்தவடிவேல் தலைமை தாங்கினார்.காங்கேயம் கல்வி குழுமம் தலைவர் என்.ராமலிங்கம்,செயலாளர் சி. கே. வெங்கடாசலம், பொருளாளர்சி. கே. பாலசுப்ரமணியம், பொருளாளர். தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்.ஆர். வி. மகேந்திர கௌடா, ஆராய்ச்சி மற்றும் தொழில் இணைப்பு இயக்குனர்.
டாக்டர். பி. தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ். ராம்குமார் வரவேற்புரை வழங்கினார்.அப்போது கடந்த ஆண்டு கல்லூரி படைத்த சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை விளக்கும் விரிவான அறிக்கையை வெளியிட்டார். கல்வித் தரம், வேலைவாய்ப்பு முயற்சிகள் மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்கள் குறித்து அவர் உரையில் குறிப்பிடப்பட்டார்.தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
ராயல் என்ஃபில்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர் கணேஷ் நாகராஜன் மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு வழங்கி உரையாற்றினார்.அப்போது இன்ஜினியரிங் கல்வியின் உண்மையான மதிப்பைக் குறித்து அவர் தெளிவாக எடுத்துரைத்தார். இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகள், நேர்மை மற்றும் சமூக பொறுப்பை ஏற்று முன்னேற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பட்டம் பெறும் மாணவர்களுக்கு சமூகத்தில் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யவும், தொழில் நற்பெயரை நிலைநாட்டவும் அவர் ஊக்கமளித்தார்.
பின்னர், பல்துறை தலைவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகளில் தகுதிபெற்று பட்டம் பெறும் மாணவர்களின் பெயர்களை அறிவித்தனர். முதல்வர் பட்டம் பெறும் மாணவர்களிடம் தொழில் ஒப்பந்த உறுதிமொழியை எடுத்துக்கொடுத்தார்.
தொழில்முறை பொறுப்புகளை நேர்மையாக மேற்கொள்ளவும். கல்லூரியின் பெயர் பெருமை ஏற்றவும், தங்கள் தொழிலின் மரியாதையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் மற்றும் பட்டம் பெறும் மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
