கமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் சர்வதேச போதை பொருள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் திரு முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரியில் சர்வதேச போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ” போதை இல்லா சமுதாயம் வேண்டும் ” என்ற உயரிய நோக்கோடு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் உறுதி மொழி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது ,நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மேரிசுஜின் அனைவரையும் வரவேற்றார், போதை தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர். அ. முகம்மது அசாரூதீன் விளக்கவுரை அளித்தார்,

முதல்வர் முனைவர் கோ.தர்மர் தலைமை வகித்தார்,சிறப்பு விருந்தினராக கமுதி சார்பு ஆய்வாளர் கௌதம் ” போதை இல்லா தமிழகம் ” என்ற தலைப்பில் போதையின் தீமை, சுய ஒழுக்கம், போதை இல்லா சமுதாயம் படைப்பதில் இளைஞர்களின் பங்கு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.பூ.கஜேந்திரநாயகம் போதை இல்லாத தமிழகம் குறித்து வாசிக்க மாணவர்கள் பின்தொடர்ந்தது உறுதி மொழி ஏற்றனர், நிறைவாக நாட்டு நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்பாளர் பேரா.மாமல்லன் நன்றி கூறினார்.