திருவாரூர் அரசு உதவி பெறும் வ. சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்..
ஒவ்வொருஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருவாரூர், வ. சோ. ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை (என்சிசி) கப்பல் படைப்பிரிவு மாணவர்களுக்கு யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது

அமைதி உடல் வலிமை மன வலிமை நினைவாற்றல் திறன் அதிகரிக்க யோகசனப்பயிற்சி அவசியம் என்பதை வலியுறுத்தி பள்ளிச் செயலர் முனைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்துப் பேசினார் பொறுப்புத் தலைமை ஆசிரியர் எஸ். முருகேசன் தலைமை ஏற்றார் சுமார் 100 என்சிசி மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டனர்

பள்ளி உதவி தலைமை ஆசிரியரும் என்.சி.சி அதிகாரியுமான ஆர். சதீஷ்குமார் யோகாசனப் பயிற்சி அளித்தார் தனுராசனம், உட்கட்டாசனம் சக்ராசனம் வீரபத்ராசனம் புஜங்காசனம் விருக்ஷாசனம் தடாசனம் மற்றும் பாதகோணாசனம் போன்ற ஆசனங்கள் செய்து பயிற்சி மேற்கொண்டனர் உடற்கல்விஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்