திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா பொல்லனேரி கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன். இவர் லோடு வேன் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவர் லோடு வேனில் சென்னை மஞ்சம்பாக்கம் பைபாஸ் சாலையில் சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் மேல்பகுதியில் இருந்த உயர் அழுத்த மின்சார வயரில் லோடு வேனில் கண்டெய்னரில் உரசியதில் வேன் தீப்பற்றி எரிய தொடங்கியது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் வேனில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் லோடு வேன் முழுவதும் தீயில் கருகியது. தீ விபத்து குறித்து மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயர் அழுத்த மின்வயர் உரசி லோடு வேன் தீப்பற்றி எரியும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சாலைக்கு மேல்பகுதியில் பெரும்பாலான இடங்களில் உயர் மின்அழுத்த வயர்கள் இருப்பதால் உயர் மின்அழுத்த வயர் உரசி லோடு வேன் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியை சுற்றியுள்ள வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.