ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்தில் 60 கிராமங்கள் உள்ளது
இந்தப் பஞ்சாயத்து பகுதியில் தொடர்ந்து பல்வேறு அடிப்படை வசதிகள் தொய்வு ஏற்பட்டதாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் அடிப்படையில் வியாழக்கிழமை மாலை மாப்பிள்ளை பஞ்சாயத்து அலுவலகத்தில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கூட்பட்ட பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார் அப்போது பொதுமக்கள் கடந்த ஒன்றரை மாத காலமாக குடிநீர் எங்கள் பகுதிக்கு வரவில்லை நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம் என்று எம் எல் ஏ சண்முகையாவிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
உடனடியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை அழைத்து ஏன் ஒன்றரை மாத காலமாக குடிநீர் வழங்காமல் உள்ளது அதற்கான காரணம் என்ன என்று கேட்டறிந்தார் அதற்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தற்போது புதியதாக குடிநீர் பைப்லைன் பறிக்கப்பட்டு வருகிறது
அதில் உடைப்பு ஏற்படுகிறது அதனால் குடிநீர் தாமதம் ஏற்படுகிறது என்று அதிகாரிகள் கூறினார்கள் அதற்கு எம்எல்ஏ சண்முகையா நாளை இதுவரை குடிநீர் வழங்காத பகுதிகளுக்கு கண்டிப்பாக குடிநீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார் அதுபோல பட்டா எங்களுக்கு வழங்க வேண்டும் என்று எம் எல் ஏ சண்முகையாவிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்
அப்போது தற்போது பட்டா வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று உள்ளது விசாரணைக்கு அதிகாரிகள் வரவில்லை என்றால் உடனடியாக நீங்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் மனு அளிக்க வேண்டும் அதன் அடிப்படையில் உங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களிடம் உறுதி அளித்தார்
மேலும் சில மக்கள் எங்கள் பகுதியில் தெரு விளக்கு எரியவில்லை என்று கோரிக்கை வைத்தனர் நாளை மின்விளக்கு எரியாத பகுதிகளுக்கு அதிகாரிகள் வந்து உடனடியாக பார்வையிட்டு மின்விளக்கு பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்
இதனை அடுத்து சவேரியார் புரம் பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறக்கப்படாமல் உள்ளது என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
தற்போது குழந்தைகள் அங்கு உள்ள ஓலை செட்டில் படித்து வருகின்றனர் என்று கூறினார்கள் அதற்கு அதிகாரியில் அழைத்து எம்.எல்.ஏ சண்முகையா காரணத்தை கேட்டறிந்தார் அப்போது குடிநீர் இணைப்பு வழங்கவில்லை என்று பொதுமக்கள் கூறினார்கள் ஊராட்சி செயலாளரை அழைத்து உடனடியாக நாளை காலை அங்கன்வாடி மையத்துக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் மாலையில் அங்கன்வாடி மையம் திறக்கப்படும் என்று அதிரடியாக சண்முகையா உத்தரவிட்டார்
சுமார் ஒன்னற மணி நேரம் மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதனை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன் முன்னாள் வார்டு உறுப்பினர் பாரதி உள்ளிட்ட திமுகவினர் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
