திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி (மக்கள் குறை தீர்க்கும் முகாம்) நடைபெற்றது

திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் தண்டையார் பேட்டை கோட்டாட்சியர் பெருமாள் மற்றும் திருவெற்றியூர் தாசில்தார் சகாய ராணி திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் மற்றும் மண்டல குழு தலைவர் தி மு தனி யரசு திரவியம் கோமதி சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்

இதில் எண்ணூர் மணலி திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர் இதில் பட்டா பெயர் மாற்றும் விதவை உதவித் தொகை முதியோர் உதவித்தொகை ஊனமுற்றோர் பென்ஷன் ஆதார் அட்டை பெயர் திருத்தம் உள்ளிட்ட மனுக்களை அளித்த நிலையில்

அவைகளைப் பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து 57 பேருக்கு பட்டாவும் 16 பேருக்கு உதவி தொகை மற்றும் 27 பேருக்கு முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை மொத்தம் 100 பேருக்கு வழங்கப்பட்டது