இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பாழடைந்த குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு தார்ப்பாய் வழங்கும் நிகழ்ச்சி
விருத்தாசலம்
விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி விருத்தாசலம் தாலுக்கா கிளை சார்பில் பாழடைந்த குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் மழையில் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் தார்ப்பாய் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தாலுக்கா கிளை தலைவரும் கோட்டாட்சியருமான விஷ்ணு பிரியா தலைமை தாங்கி பாதிக்கப்பட்ட 20 பேருக்கு தார்பாய்கள் வழங்கினார்.
கௌரவ செயலாளர் மணிகண்டராஜன் முன்னிலை வகித்தார். இந்தியன் ரெட் கிராஸ் விருத்தாசலம் தாலுகா கிளை நிர்வாகிகள் திருவரசு, அகிலன், பொருளாளர் ஸ்டாலின், சரவணகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
