திருப்பூர் தாராபுரம் சாலை என். காஞ்சிபுரம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்

கோவை மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் வயது 35 என்பவர் கோவையிலிருந்து காரைக்குடிக்கு வாடகைக்கு 23 பயணிகளை ஆம்னி பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு காங்கயம் அடுத்த கொடுவாய் என்.காஞ்சிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வந்து கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து ஊதியூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.