தேனி மாவட்டம் கம்பம் நகரில் பைபாஸ் சாலையில் உள்ள ராம் ஜெயம் நகரில் ஆர் ஜே எம் எஸ் குழுமம் சார்பாக தி டேன் யூப் மற்றும் மற்றும் இத்துடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது

இதன் திறப்பு விழாவிற்கு ஆர் ஜே எம் எஸ் குழும நிர்வாக இயக்குனர் கே. ஆர் சௌந்தரராஜன் தலைமை வகித்தார் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ரிப்பன் பெட்டி திரையரங்கம் மற்றும் வணிக வளாகத்தினை திறந்து வைத்தார்.

இந்த விழாவில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கே ஆர் சௌந்தரபாண்டியன் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகமது தாசில்தார் கண்ணன் உள்பட அரசு அலுவலர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய பாதுகாப்பு துறை அதிகாரி ராம் ஜெயந்த் அனைவரையும் கனிவுடன் வரவேற்றார் பைபாஸ் சாலையில் திறக்கப்பட்டுள்ள தி டேன் யூப் திரையரங்கம் மற்றும் வணிக வளாகம் குறித்து ஆர் ஜே எம் எஸ் குழும மேலாண்மை இயக்குனர் கே ஆர் சௌந்தர்ராஜன் கூறும் போது இந்த தியேட்டரில் இரண்டு திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன அமெரிக்கா பிரான்ஸ் தாலி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் உள்ளது

போல் இரண்டு திரையரங்குகளில் தலா 167 பேர் அமரக்கூடிய வகையில் முழுவதும் குளுகுளு ஏசி வசதியுடன் கட்டப்பட்டுள்ளது

மேலும் நவீன இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது இந்த தியேட்டருக்கு தி டேன் யூப் ராம் ஜெயம் மெஜஸ்டிக் ஸ்கொயர் என்று பெயரிடப்பட்டுள்ளது இவ்வாறு மேலாண்மை இயக்குனர் கே ஆர் சௌந்தரராஜன் கூறினார்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *