தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் 102 பிறந்தநாள் விழா அமைதி ஊர்வலம் எம்பி தலைமையில் நடந்தது தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அதன் செயலாளரும் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது
முன்னதாக தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி னார்.தேனி நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய ஊர்வலம் பெரியகுளம் ரோடு மதுரை ரோடு பங்களா மேடு என் ஆர் டி நகர் உள்ளிட்ட நகரின் பிரதான வீதிகளில் அமைதி ஊர்வலம் நடைபெற்று
புதிய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.இந்த ஊர்வலத்தில் தேனி மாவட்டத்தை உருவாக்கிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா குறித்து கோஷங்கள் எழுப்பி அமைதி ஊர்வலம் நடைபெற்று முடிந்தது இந்த ஊர்வலத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் நகராட்சி நகர் மன்ற தலைவர்கள் தேனி ரேணுப்ப்ரியா பாலமுருகன் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர். பேரூராட்சி மன்ற தலைவர்கள் பூதிப்புரம் கவியரசு பால்பாண்டியன் மார்க்கையன்கோட்டை ஓ ஏ முருகன் குச்சனூர் பிடி ரவிச்சந்திரன் மேல சொக்கநாதபுரம் கண்ணன் காளி ராமசாமி தாமரைக்குளம் ச
பால்பாண்டி வடுகபட்டி நடேசன் தென்கரை வி நாகராஜ் தேனி நகர செயலாளர்கள் சூர்யா பாலமுருகன் நாரயண பாண்டியன் உள்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் சார்பு அணி நிர்வாகிகள் நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
