தென்காசி

தென்காசி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை தொமுச சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு தொமுச தென்காசி பணிமனை செயலாளர் வல்லம் எம். திவான் ஒலி தலைமை தாங்கினார்

தொமுச பணிமனை தலைவர் மணிகண்டன் மற்றும் பொருளாளர் ஜோசப் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது

இந்நிகழ்ச்சியில் ரவீந்திரன் சேர்மலிங்கம் கண்ணன் கருப்பையா இருதயராஜ் ஜெரால்டு சிவசைலப்பன் சிவகுருநாதன் சுடலைமுத்து சாமிநாதன் முருகையா மணி கிருஷ்ணன் வெங்கடாசலம் பொன்னுத்துரை சந்திரன் நடராஜன் பால்கனி சார்லஸ் மகேந்திரன் மகேஷ் சுரேஷ் ஆவுடைநாயகம் உட்பட ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்களும் தொமுச நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *