இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அப்போது நாகனேந்தல் , நெடுங்குளம் கிராம விவசாயிகளை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்து காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். உடன் அரசு துறை அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.