தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேனி வடக்கு மாவட்ட தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் நடைபெற்றறது
இந்தக் கூட்டத்தில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம் பி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார் முன்னதாக பெரியகுளம் நகர திமுக செயலாளர் முகமது இலியாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பிடி செல்லபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கூட்டத்தில் அரசின் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நல்லாட்சியின் சாதனைகள் குறித்து விளக்கிப் பேசப்பட்டது. பெரியகுளம் நகர அவைத் தலைவர் டி வெங்கடாசலம் நன்றி கூறினார்
