பரமக்குடியில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியையொட்டி ராணுவ வீரர்களுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் பா.ஜ., உள்ளிட்ட பல கட்சியினர் மற்றும் ஹிந்து அமைப்பினர் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆபரேஷன் சிந்துார் வெற்றியை பெற்றுக் கொடுத்த ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நடந்தது.
பரமக்குடி சந்தை கடையில் துவங்கி, பஸ் ஸ்டாண்ட், ஆர்ச், காந்தி சிலை, பெரிய பஜார் வழியாக நகராட்சி முன்பு நிறைவடைந்தது.
பேரணியில் பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, மாவட்ட துணை தலைவர் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கண்ணன், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், வக்கீல் பிரிவு பிரபு, நகர் தலைவர் ரவி, அ.தி.மு.க., முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் ஜெய்சங்கர், அ.ம.மு.க., நகர் செயலாளர் சத்யமூர்த்தி, ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் வீரபாண்டியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
