மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்

தரங்கம்பாடி உப்பனாற்று கரையோரம் பழைய இரயில் பாததையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு.கோழி கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில் வெளி மாநில மாட்டிறைச்சி கழிவுகளும் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் அவலம்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் பிரதான வடிகால் ஆறுகளில் ஒன்றாக தரங்கம்பாடி உப்பானாறு அமைந்துள்ளது.தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலைக்கும் ஆற்றின் கரைக்கும் நடுவே அமைந்துள்ள பழைய இரயில் பாதையில் இரவு நேரங்களில் தனி நபர்கள் இறைச்சிக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொட்டிச்செல்கின்றனர்.

கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து இரவு நேரங்களில் மாட்டிறைச்சி கழிவுளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கோடு ஏற்பட்டுள்ளது.இந்த துர்நாற்றத்தை கடந்தே பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம்,அரசு மருத்துவமனை,காவல் நிலையம் என அத்திவசிய தேவைகளுக்கு சென்று வரும் அவலநிலை உள்ளது.

மேலும் இறைச்சி கழிவுகளை காகம் மற்றும் கழுகுகள் தூக்கி சென்று அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தொட்டிகளில் போடுவதால் தண்ணீரை பயன்படுத்தும் மக்கள் உடல் உபாதைகள் ஏற்பட்டு கடும் அவதியடைந்து வருகின்றனர். மழைக்காலங்களில் கழிவுகள் முழுவதும் உப்பனாற்றில் அடித்து செல்லப்பட்டு நீர் ஆதாரமும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

என குடியிருப்பு பகுதி அருகே பிரதான பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டி வரும் தனி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், வெளி மாநிலத்திலிருந்து மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.