அரையபுரம் தட்டுமால் படுகை விவசாயிகளுக்கு உடனே பட்டா வழங்கிட வேண்டும் பாபநாசம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாட்டில் தீர்மானம்
பாபநாசம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 23 வது ஒன்றிய மாநாடு கபிஸ்தலத்தில் ஒன்றிய செயலாளர் பொன். சேகர் தலைமையில் நடைபெற்றது முன்னாள் மாவட்ட துணை செயலாளர் பரமசிவம் கொடியினை ஏற்றி வைத்தார் ஒன்றிய துணைச் செயலாளர் கனகராஜ் வரவேற்று பேசினார்.
விவசாய சங்க ஒன்றிய செயலாளர் புகழேந்தி உறுதிமொழி ஏற்பு வாசித்தார்.
இம் மாநாட்டில் ஏஐடியுசி மாநிலச் செயலாளர் தில்லைவனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் தங்க. சக்கரவர்த்தி , அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் குரு. சிவா,ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அரையபுரம் தட்டுமால்படுகை விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ரயத்துவாரிப்பட்டா உடனே வழங்க வேண்டும் பாபநாசத்தில் புதிய வேளாண் கல்லூரி அமைத்திட வேண்டும் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில், 108 சிவாலயம், திருப்பாலைத்துறை பாலைவனநாதர் சுவாமி திருக்கோயில் ஆகிய இடங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கிட வேண்டும்.
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பாபநாசம் ஒன்றியத்தில் நடைபெற்றுள்ள பணிகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்.
நிலமற்ற விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு 8 சென்ட் நிலம் வழங்கி வீடு கட்ட ரூ. 5 லட்சம் மானியம் வழங்கிட வேண்டும்.
முருக்கங்குடி ,கோனூர், வையச்சேரி, பொறக்குடி, தென்னங்குடி ,பெருமாக்க நல்லூர் ,புன்னைநல்லூர், சூலமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் பாபநாசம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்திட வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இம்மாநாட்டில் பாபநாசம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் பாபநாசம் ஒன்றிய செயலாளராக பொன்.சேகர், ஒன்றிய துணைச் செயலாளராக கனகராஜ், ஒன்றிய பொருளாளராக புகழேந்தி ஆகியோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் முடிவில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் இலங்கேசன் நன்றி கூறினார்.
