எஸ். டி. பி. ஐ. கட்சியின் 17வது ஆண்டின் துவக்க தினத்தை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 12ம் வகுப்பில் வெற்றிபெற்ற மாணவ-மாணவி
யர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல் மற்றும் பாராட்டு விழா மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் அபுதாஹிர் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் சுங்கம் பள்ளி ஆசாத் அலி அன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்த மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர்,, விமன் இந்தியா மூமென்ட் மாநில தலைவர் பாத்திமா கனி அவர்களும், கல்வியாளர் அணி மாநில இணை-செயலாளர் ரியாஜ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தி மாணவ மாணவி யர்களுக்கு கல்வி உதவித் தொகையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர்.


நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினர்களான 12ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவ-மாணவி
களுக்கு கல்வி உதவித்தொகை, பள்ளி உபகரணங்கள், சான்றிதழ்கள், ஸ்கூல் பை போன்றவைகள் பரிசாக வழங்கப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இலியாஸ் நன்றி கூறினார்.