பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.
பாபநாசம் அருகே அக்கரைப்பூண்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் நரசிம்ம மூர்த்தி ஆலய சித்திரை மாத பால் குட திருவிழா

200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அக்கரைப்பூண்டியில் எழுந்தருளிள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் நரசிம்ம மூர்த்தி ஆலய சித்திரை மாத பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து மேல தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது அதனைத் தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவின் ஏற்பாடுகளை அக்கரைப்பூண்டி கிராமவாசிகள் நாட்டாமைகள் செய்திருந்தனர்.
