கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஆப்பரேசன் சிந்தூர் வெற்றியை பாஜகவினர் கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி மாவட்ட துணை தலைவர் தருமன் தலைமையில் நடைபெற்ற இவ்வெற்றி விழாவை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நான்கு வழிச்சாலை வழியாக பேருந்து நிலையம் வரை சென்று பின்னர் பாளேதோட்டம் சந்திப்பு சாலை வரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலம் நடைப்பெற்றது.

இந்தப் பேரணியில் மாவட்ட பொது ச்செயலாளர் எம் ஆர் ராஜேந்திரன் சுந்தரமூர்த்தி, கிழக்கு மண்டல தலைவர் சாமிநாதன் வடக்கு மண்டல் தலைவர் சுகந்தி, சரவணன், வெங்கடாஜலபதி, அகிலன், ஒன்றிய செயலாளர். சகாதேவன், ஜானகிராமன், டிவி. சேகர், பெரியசாமி,மோகன் அகிலா, கோகிலா, மஞ்சுளா, சிலம்பரசி உள்ளிட்ட ஆண்கள் பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் ஆப்பரேசன் சிந்தூரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மெழுவற்றி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இப்பேரணியில், உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். போச்சம்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.