தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதிகளில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகளில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை…..

தமிழகத்தில் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது மேட்டூர் அணையாகும்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்கு பருவ மழைநீரையும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும் வடகிழக்கு பருவ மழைநீரையும் மேட்டூர் அணை மூலம் சேமித்து வைத்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்த கோடை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம் தற்போது மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளதால் ஜூன் 6-ம் தேதியே காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர் .
மேலும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் வறண்ட நிலையில் உள்ள கொள்ளிடம் ,காவிரி , குடமுருட்டி, அரசலாறு வெண்ணாறு, வெட்டாறு, மண்ணியாறு, உள்ளிட்ட அனைத்து ஆறுகளையும், மற்றும் ஏரி ,குளங்களையும் தூர்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எனவும் மேலும் காவிரி ஆற்றில் உள்ள மண்ணியாறு தலைப்பில் வெள்ள காலங்களில் வெள்ளத்தை தடுப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள் தற்போது சிதலம் அடைந்துள்ளதால் உடனே அப்பகுதியில் சிதலம் அடைந்த மணல் மூட்டைகளை மாற்றி வெள்ள அபாய பாதுகாப்பிற்காக புதிய மணல் மூட்டைகளை மாற்றி சேமித்து வைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
