மதுரை உத்தங்குடியில் மதுரை ஒருங்கிணைந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மதுரை வடக்கு தெற்கு மற்றும் மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பங் கேற்ற கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவல் துறை அமைச்சர் பி.டி.ஆர்.
பழனி வேல் தியாகராஜன் மாண வர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் பி மூர்த்தி பேசிய போது வருகிற 31, 1 , 2 ஆகிய மூன்று நாட்கள் முதல்வர் மதுரைக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஏறத்தாழ 50 ஆண்டுக ளுக்கு பின்பு வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழுவில் நடந்த வாய்ப்பு தந்த மைக்கு நமது மதுரை ஒருங் கிணைந்த மாவட்ட திமுக சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கி றேன், அதேபோல் வருகிற 31ம் தேதி மாலை நடை பெறுகிற ரோடு ஷோ என் பது வரலாற்றிலேயே மதுரையில் நடைபெற்றது

போல் எங்கும் நடைபெற வில்லை என அனைவரும் வியக்கும் வகையில் நடை பெற வேண்டும் அதற்குத் தான் இந்த கூட்டம்மே 31ம் தேதி மு. க. ஸ்டாலின் வருகிறார் பெருங்குடியிலிருந்து வந்து அவனியாபு அவனியாபுரத் தில் ஆரம்பித்து வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம் வழி யாக குருதியேட்டர் சென்று அங்கிருந்து கிராஸ் ரோடு திருமலை நாயக்கர் சிலை வழியாக திரும்பி இந்த இயக்கத் திற்காக அரும்பாடு பட்டு இந்த இயக்கத்தை வளர்த்த வரும், மதுரையின் முதல் மேயராக இருக்கக்கூடிய மரியாதைக்குரிய நம்மு டைய மேயர் முத்து சிலையை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

மதுரை மாவட்ட மட்டுமல்ல தமிழ்நாடே பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்தில் போட்டி போட்டு நிகழ்ச்சி நடத்தினாலும் கூட மதுரை யில் நடைபெறும் மிகப்பெ ரிய ரோடு ஷோ என்பது மிகப் பெரிய வெற்றிகர மாக அமைய வேண்டும், மேலும் அடுத்து இந்த விழாக்களே 2026 சட்டமன் றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு ஆரம்பமாக அமையும் எனவே அதற்கு மூன்று மாவட்ட கழகங்க ளும் இணைந்து உழைத் திட வேண்டும் என பேசி னார்.

இக்கூட்டத்தில் திமுக உயர்நிலை பர்நிலை செயல் செயல் திட்டக் குழு உறுப்பினர் பெ.குழந்தை வேலு, மாவட்ட துணைச் செயலாளர் ஆ.வெங்க டேசன் எம்.எல்ஏ, தலைமை செயற் குழு உறுப்பினர்கள் மா. ஜெயராம் உள்ளிட்ட திரளான தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பொன் முத்துராமலிங்கம், வேலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.