செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் செயல்பட உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.

ஆகையால் நேற்று செய்யூரில் கல்லூரி செயல்பட உள்ள இடத்தினை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு,மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா,
மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் முனைவர் மலர்,செய்யூர் வட்டாட்சியர் சரவணன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்