துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350 சதய விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.தமிழ் நிலத்தில் போரில் வென்ற மன்னர்கள் வாகை மலர் சூடி மகிழ்வார்கள்.அக்காலத்தில், தன்னுடைய போர்த்திற வெற்றியைத் தன்னம்பிக்கையுடன் உறுதி செய்து,போருக்குச் செல்லும் முன்பே வாகை மலர் சூடிச் சென்றவர்,
மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர்தோல்வியே காணாத வரலாற்றுச் சிறப்புமிக்கவர். அரசர்களுக்கு எல்லாம் பேரரசராகத் திகழ்ந்த அரச வாகை கொண்ட பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாளில், தமிழ் மண்ணுக்கும் தமிழர் உரிமைக்கும் அவர் ஆற்றிய சேவைகளைப் போற்றிடும் வகையில் அவரின் பிறந்த நாளை (மே-23) தமிழ்நாடு முதலமைச்சர் அரசு விழாவாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350 சதய விழா துறையூர் சட்டமன்றத் தொகுதி முத்தரையர் சங்க நிர்வாகிகள் சதீஷ்குமார், ரகுநாத், குமார், பார்த்திபன் ஆகியோர் தலைமையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து துறையூர் பேருந்து நிலையம் முன்பு பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மணி, வினோத், ரகு உள்ளிட்ட முத்தரையர் சங்க சொந்தங்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துறையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
