செங்கல்பட்டு மாவட்டம் பகல்ஹாம் தாக்குதல் ஏற்படுத்தி தீவிரவாதிகள் மீது தாக்குதல்
நடத்தி பாகிஸ்தான் தொடுத்த தாக்குதலை முறியடித்த இந்தியாவை பாதுகாத்த
ராணுவ வீரர்களுக்கும் பாரத பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய கொடி ஏந்தி பேரணி நடத்தினர்.

சித்தாமூர் ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் மருத்துவர் பிரவீன்குமார் தலைமையில் பகல்ஹாம் தாக்குதல் சுற்றுலா சென்ற 26 நபர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது பாகிஸ்தானில் முகாமிட்டிருந்த தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்து என்று பெயர் வைத்து முகாம்களை அழித்தனர்.

இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தின. வெற்றிகரமாக தாக்குதலை முறியடித்து பாகிஸ்தானை சதியை முறியடித்த இந்திய ராணுவத்திற்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய கொடி ஏந்தி சித்தாமூர் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர். இதில் 300 க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்.