கோவை மாவட்ட புதிய அறங்காவலர் குழு பதவி ஏற்பு விழா

தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கோவை மாவட்ட அறங்காவலர் குழுவினர் உறுதி மொழி ஏற்று பதவி ஏற்று கொண்டனர் கோவில்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும்,நிகழ்ச்சிகள் மற்றும் குடமுழுக்கு விழாக்கள் போன்றவற்றை ஒருங்கிணைத்து நடத்த, தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை அறங்காவலர் குழுவினர் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில்,தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை கோவை மாவட்ட அறங்காவலர் குழு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இதில் மாவட்ட அறங்காவலர் குழு புதிய தலைவராக ராஜா என்ற ராஜாமணி, அறங்காவலர் குழு உறுப்பினர்களாக எஸ்.எம்.டி. கவிதா கல்யாணசுந்தரம்,பார்த்திபன்,கர்ணபூபதி,மற்றும் தனபால், ஆகியோர், தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய குழுவினர் பதவி ஏற்பு விழா, கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள அருள்மிகு.கோனியம்மன் திருக்கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா புதிய தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் , வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்