தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு அதிமுக மாநகர கழகம் சார்பில் தமிழகத்தில் அதிகரித்து வருகிற பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் மாநகர கழகம் செயலாளர் சரவணன் ஏற்ப்பாட்டின் பேரில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி,உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். தமிழகத்தில் அதிகரித்து வருகிற பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தடுக்க திராணியற்று வேடிக்கை பார்க்காமல் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பகோணத்தில் தனியார் கடையில் பணிபுரிந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், திமுகவின் நிர்வாக சீர்கேட்டிற்கு சாட்சியாக உள்ளது.

சிறுமி முதல் முதியோர் வரை தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டி யார் அந்த சார், யார் அந்த தம்பி என்று கோஷம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறவேண்டும் என்று கண்டன உரையாற்றினார்.

முன்னதாக தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவருமான மா.சேகர் வரவேற்புரையாற்றினார். அமைப்புச் செயலாளர்கள் ஆர் காந்தி, துரை செந்தில், கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதி மோகன், மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சிவி சேகர், மாநகர செயலாளர் என் எஸ் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் துரை. திருஞானம், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் துரை,வீரணன், அம்மா பேரவை இணைச் செயலாளர் அறிவுடை நம்பி, விவசாய பிரிவு செயலாளர் ராஜமாணிக்கம், துணைச் செயலாளர் சிங்ஜெகதீசன், முன்னாள் மேயரும் மாவட்ட இணை செயலாளருமான சாவித்திரி கோபால்,, பொருளாளர் அன்புச்செல்வன், பகுதி செயலாளர்கள் பஞ்சாபிகேசன், புண்ணியமூர்த்தி, சதீஷ்குமார், மனோகர், ஒன்றிய செயலாளர்கள் ஸ்டாலின் செல்வராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்னேஸ்வரன், மாணவரணி செயலாளர் நாராயணி ஜவகர் சக்திவேல், மாமன்ற உறுப்பினர் கண்ணுக்கினியாள், அம்மா பேரவை துணைத்தலைவர் பாலை .ரவி மற்றும் மாவட்ட பிரிவு நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் ஒன்று நிர்வாகிகள் கிளை செயலாளர் முன்னாள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உட்பட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்