தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.
மூலனூர்,
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 22.05.2025 வியாழக்கிழமை அன்று பருத்திவிற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 379 நபர்கள் பருத்தி கொண்டு வந்திருந்தனர். பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர்,திண்டுக்கல், ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.
வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8678’ற்கும் குறைந்தபட்சவிலை ரூ.7200ற்கும் சராசரி விலை ரூ.7750ற்கும் விற்பனையானது.
பருத்தியின் மொத்த அளவு 4434மூட்டைகள்,குவிண்டால் 1471.96 மதிப்பு ரூ.1,13,18,811/- ஏலத்தில் 17 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என முதுநிலை செயலாளர், திருப்பூர் விற்பனைக்குழு சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
அனைத்து ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
