தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நகர பாஜக சார்பில் பஹால்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி ஆண்கள் 26 இந்துக்கள் கொல்லப்பட்டனர்
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது இந்த தாக்குதலுக்கு பெண்களின் குங்குமத்தை குறிப்பீடும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்று பெயரிட்டு மாபெரும் வெற்றியை இந்திய ராணுவம் பெற்றது
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் நமது ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் போடிநாயக்கனூர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசியக்கொடியை ஏந்தி பாஜக மாவட்ட தலைவர் பி. ராஜபாண்டியன் தலைமையிலும் பாஜக நகரத் தலைவர் நகராட்சி நகர மன்ற கவுன்சிலர் சித்ராதேவி தண்டபாணி முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் மாபெரும் வெற்றி ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலம் போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகம் கட்டபொம்மன் சிலை முன்பு தொடங்கி நகரின் பிரதான பகுதியான முந்தல் ரோடு தேனி ரோடு பஜார் வீதி உள் பட நகரின் பிரதான வீதிகளில் சென்று பஸ் நிலையம் அருகே உள்ள தேவர் சிலை முன்பு நிறைவு பெற்றது
இந்த ஊர்வலத்தில் நகர பொதுச்செயலாளர் நகர் மன்ற கவுன்சிலர் எம் மணிகண்டன் நகர பாஜக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
