திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் வடக்கு ஒன்றியம் பெரமியம் தூரம்பாடி கருப்பன்வலசு முளையாம்பூண்டி ஆகிய ஊராட்சிகளில் அதிமுக பூத் கமிட்டி சரிபார்த்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மூலனூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம், பேரூர் செயலாளர் வெற்றிவேல், கன்னிவாடி பேரூர் செயலாளர் லட்சுமணசாமி,தாராபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகுமாரன், ஒன்றிய அவைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட மாணவரணி பொருளாளர் சேகர், மாவட்ட ஓட்டுநர் அணி பங்க் மகேஷ், ஐடி விங் மண்டல து.செயலாளர் ராகேஷ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் திரலாக கலந்து கொண்டனர்

Share this to your Friends