கோவை கணபதி பகுதியில் உள்ள ஹாரீஸ் ஹெல்த் கேர் மையத்தில் இலவச மருத்துவ முகாம்
ஜஸ்டின் ஹாரீஸ் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு காலஞ்சென்ற ஜஸ்டின் ஹாரிஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை கணபதி பகுதியில் உள்ள ஹாரிஸ் ஹெல்த் கேர் மையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது…
இதன் துவக்க நிகழ்ச்சியில் அலையன்ஸ் கிளப் கோயமுத்தூர் சிட்டி சென்ட்ரல் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர் மருத்துவர் ரீனா ஹாரீஸ் தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமில், ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளும் இலவசமாக நடத்தப்பட்டது..
இதில் இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்,தைராய்டு,இருதயம்,கண்,,தொற்று நோய் தொடர்பு,நுரையீரல் தொடர்பான பரிசோதனைகள் என அனைத்து விதமான தோய்கள் தொடர்பான பரிசோதனைகளும் இலவசமாக நடைபெற்றது..
இது குறித்து பேசிய டாக்டர் ரீனா ஹாரீஸ், காலஞ்சென்ற தனது தந்தை ஜஸ்டின் ஹாரீஸ் பிறந்த நாள் நினைவாக இந்த மருத்துவ முகாமை நடத்தி வருவதாகவும், இனி வரும் காலங்களில் இது போன்ற இலவச மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்த இருப்பதாக கூறிய அவர்,பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு அவர் தெரிவித்தார்..
இலவச மருத்துவ முகாமில் கணபதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்…