தென்னிந்தியாவின் சிறந்த வழிகாட்டியாக தமிழகத்தின் உதகையை சேர்ந்தவருக்கு தாய்லாந்தில் விருது வழங்கி கௌரவம்…

உலகெங்கிலும் உள்ள சிறந்த சுற்றுலா வழிகாட்டிகளுக்கான விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் தனியார் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வருகின்றது.

இதேபோல் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தாய்லாந்து புகாட்டியில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது இதில் இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா வழிகாட்டிகள் கலந்து கொண்டு விருது பெற்றனர்.

சுற்றுலா பயணிகளால் வழங்கப்பட்ட கருத்து அடிப்படையில் சுற்றுலா பயணிகளையும் தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விருதினை இங்கிலாந்துசுற்றுலா நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குனர் ரிச்சர்ட் ப்ராஸ்சர் மற்றும் நிறுவனத்தின் சிஇஓ நிக் லாங்மேன் ஆகியோர் அனைவருக்கும் விருது வழங்கி கௌரவித்தனர்.

தென்னிந்தியாவிலேயே சிறந்த சுற்றுலா வழிகாட்டியாக நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டிக்கு விருது வழங்கியுள்ளது நீலகிரி மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.

இந்த விருது வழங்கும் விழாவில் ஆட்லி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா பயணிகள் என பலர் கலந்து கொண்டனர்.