புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் முனைவர் சிவ.வசந்தகுமார் அவர்கள் மாலை அணிவித்தார்….
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு மாதந்தோறும் 20 ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இம்மாத நிகழ்வில் புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் முனைவர் சிவ.வசந்தகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.உடன் செயலர் சீனு.மோகன்தாசுபொருளர் மு.அருள்செல்வம்,துணைத்தலைவர் ப.திருநாவுக்கரசு, துணைச் செயலர் தெ.தினகரன், பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன்ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தமிழ்மாமணி அ.உசேன், அ.சிவேந்திரன்,கவிஞர் இர.ஆனந்தராசன்,தொழிலதிபர் பொற்செழியன் விஜயலட்சுமி,ஆகியோர் உள்ளனர்.
