திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 105 மாணவிகள் தேர்வு எழுதியதில் 103 மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். மாணவிகள் பிரதீபா 491, ஜனனி 482, தேவவர்ஷினி 472 மார்க்குகள் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். இதில் 27 மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.
