25 ஆண்டுகளுக்கு பிறகு வகுப்பறையில் அமர்ந்த அரசு பாலிடெக்னிக் மாணவர்கள்
வகுப்பறையில் வருகை பதிவேட்டை ஆசிரியர் வாசிக்க யெஸ் சார் என முன்மொழிந்த மாணவர்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை பல்வேறு துறைகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது…
25 ஆண்டுகளுக்குப் பிறகு, மாணவர்கள் மீண்டும் ஒன்று கூடி, தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்தனர் விழாவில் தென் ஆப்ரிக்கா,லண்டன்,மலேசியா,துபாய் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நீண்ட வருடங்களுக்கு பின்பு தங்களது ஆசிரியர்களை சந்தித்த மாணவர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்த கொண்டதோடு,மீண்டும் வகுப்பறைகளில் அமர்ந்து வருகை பதிவேடுகளை ஆசிரியர் வாசிக்க யெஸ் சார் என மகிழ்ச்சி பொங்க பதிவு செய்தனர்…
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவ, மாணவிகள் சார்பாக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தாங்கள் படித்த பழைய வகுப்பறைகளை நினைவு கூறும் வகையில் பார்த்துச் சென்றனர்.
