திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் தினசரி குருபெயர்ச்சி லட்சார்ச்சனை விழா உற்சவர் தட்சிணாமூர்த்தி சன்னதியில் வேத மந்திரங்களைச் சொல்லி லட்சார்ச்சனையை ஜோதி ராமலிங்க சிவாச்சாரியார், சுவாமிநாத சிவாச்சாரியார், ஞான ஸ்கந்த சிவாச்சாரியார் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வருகின்றனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் சுரேஷ், தக்கார் சொரிமுத்து, கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.